`உலகப் பெருமையை அடைந்துவிட்டீர்கள்'- சூர்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

`உலகப் பெருமையை அடைந்துவிட்டீர்கள்'- சூர்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ள நிலையில், நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வாழ்நாளில் ஆஸ்கர் விருது பெற்றே ஆக வேண்டும் என்று திரையுலகினரின் கனவாக இருந்து வருகிறது. ஆஸ்கர் விருது பெறுவதை உச்சபட்ச சாதனையாக கருதும் நடிகர்கள், இந்திய சினிமாவுலகில் பலரும் இந்த விருதை பெற தங்கள் நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்தாண்டு ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்ட சூர்யாவின் சூரரை போற்று படம் அடுத்த சுற்றில் எதிர்பாராத விதமாக வெளியேறியது. இந்நிலையில், சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. புகழ்பெற்ற மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அகாடமியில் சேர உலக அளவில் மொத்தம் 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோல் ஆகிய இருவரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இதனிடையே, நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் அகாடமி விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யாவுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in