ஆரூர்தாஸ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி

ஆரூர்தாஸ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி

பழம்பெரும் தமிழ் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்.

திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ், சுமார் ஆயிரம் திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர். தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரினான ஏசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் நெடியப் பணிப்புரிந்த அனுபவம் ஒரு சாதனையாகும்.

ஆரூர்தாஸ்
ஆரூர்தாஸ்

1955 முதல் 2014-ம் ஆண்டு வரையில் அவர் வசனகர்த்தாவாக இயங்கியுள்ளார். சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், வடிவேலு போன்ற நடிகர்கள் நடித்த படத்திற்கு இவர் வசனம் எழுதி உள்ளார்.

வயது முதிர்வின் காரணமாக நேற்று மாலை சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட திரைப்படத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சென்னை தி.நகரில் ஆரூர்தாஸ் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் ஆரூர்தாஸ் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். ஆரூர்தாஸ் உடல் இன்று மாலை மந்தைவெளி கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in