வெப் சீரிஸை இயக்குகிறார் சேரன்: இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

வெப் சீரிஸை இயக்குகிறார் சேரன்: இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

1997-ம் ஆண்டு நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை மீனாவின் நடிப்பில் வெளியான `பாரதிகண்ணம்மா' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சேரன். அதன்பின்னர், பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த சேரன் தமிழ் சினிமாவின் என்றும் அழிக்க முடியாத இயக்குநராக பெயர் எடுத்தார்.

இந்நிலையில் சேரனின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவியதால் கடனில் அவதிப்பட்டார். அதுமட்டுமின்றி அவரின் குடும்ப வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள் இருந்து வந்தது. இதனிடையே சேரன் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கியே இருந்தார். ஆனாலும் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் பணம் கிடைக்கிறது என்ற காரணத்தாலும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அதனால் சேரன் மறுபடி பிரபலம் அடைந்த நிலையில் மீண்டும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டினார். ராஜாவுக்கு செக், திருமணம், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட குடும்ப கதைகளை மையமாகக் கொண்டு திரைப்படங்களை இயக்கினார். மேலும் இத்திரைப்படங்களில் நடித்தும் அசத்தினார்.

இதனிடையே தற்போது 2004-ம் ஆண்டு வெளிவந்த ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் கதையை போலவே வெப்சீரிஸ் இயக்கப்போவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. 2004-ம் ஆண்டு சேரன், சினேகா, கனிகா, கோபிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஆட்டோகிராஃப் திரைப்படம் பட்டித் தொட்டியெங்கும் களைகட்டியது. தேசிய விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட விருதுகளை அள்ளிக் கொடுத்த இத்திரைப்படத்தின் கதையை பார்க்கும் நம் எல்லோருக்கும் கண்ணீர் வரும். சிறுவயது காதல் முதல் திருமணம் வரை சேரன் பார்த்த பெண்களின் காதலையும், நட்பையும் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் மூலமாக அழகாக சொல்லியிருப்பார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பாணியில் ஒரு வெப்சீரிஸை இயக்க உள்ளாராம் சேரன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in