`தொழிலதிபருடன் இரவு உணவு அருந்த வேண்டும்'- அமலா பால் புகார் மீது தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

`தொழிலதிபருடன் இரவு உணவு அருந்த வேண்டும்'- அமலா பால் புகார் மீது தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தொழிலதிபர் மீது அமலாபால் கொடுத்த புகாரை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நடிகை அமலாபால், கடந்த 2018-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார். இதற்காக சென்னை தி.நகரில் உள்ள டான்ஸ் பயிற்சி மையம் ஒன்றில் ரிகர்சலில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அழகேசன் என்பவர், மலேசியாவில் இப்ராகிம் என்பவருடன் நீங்கள் இரவு உணவு அருந்த வேண்டும் என்று அமலா பாலிடம் கேட்டுள்ளார்.

இதனால் கடுப்பான அமலா பால், கடந்த 2018-ம் ஆண்டு தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் ஸ்ரீதர், அழகேசன், பாஸ்கரன், இப்ராகிம் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஸ்கரன், ஸ்ரீதரன் ஆகியோர் தங்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லை, ஆனால், குற்றவாளிகளாக சேர்த்துள்ளனர் என்று கூறியிருந்தனர். விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது எனக் கூறி குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in