காசோலை மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தினார் இயக்குநர் லிங்குசாமி!

காசோலை மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தினார் இயக்குநர் லிங்குசாமி!

காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமி ரூ. 10 ஆயிரம் அபராதத்தை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று செலுத்தினார்.

பிரபல இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம், 2014ம் ஆண்டு நடிகர் கார்த்தி, சமந்தாவை வைத்து ‘எண்ணி ஏழு நாள்’ என்ற திரைப்படத்திற்காக பிவிபி கேபிட்டல் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சம் பணம் பெற்றிருந்தது. ஆனால் லிங்குசாமி இந்தப் படத்தை எடுக்காமல் அடுத்தடுத்த படங்களை எடுத்த காரணத்தால் பிவிபி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் லிங்குசாமி அந்த தொகைக்கான காசோலையை பிவிபி நிறுவனத்திடம் வழங்கினார். ஆனால், அந்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது.

இதனால் லிங்குசாமி மீது பிவிபி நிறுவனம் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோருக்கு 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ. 10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. இந்த வழக்கை சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளதாகவும் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் லிங்குசாமி நேற்று விளக்கம் அளித்திருந்தார். ஆனால், இன்று லிங்குசாமி அபராதத் தொகை ரூ 10 ஆயிரத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in