லாரன்ஸ் நடிப்பில் 'சந்திரமுகி 2' படத்தை தயாரிக்கிறது லைகா!

ராகவா லாரன்ஸுடன் லைகா சுபாஷ்கரன்
ராகவா லாரன்ஸுடன் லைகா சுபாஷ்கரன்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டான படம், 'சந்திரமுகி'. இதில், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, வினித், சோனு சூட் உட்பட பலர் நடித்திருந்தனர். வித்யா சாகர் இசை அமைத்திருந்தார். கடந்த 2005-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்தது.

வடிவேலு, ராகவா லாரன்ஸ், லைகா சுபாஷ்கரன், பி.வாசு, தமிழ்க்குமரன்
வடிவேலு, ராகவா லாரன்ஸ், லைகா சுபாஷ்கரன், பி.வாசு, தமிழ்க்குமரன்

இதன் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாகவும், நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் கரோனா காலகட்டத்தில் அறிவித்திருந்தார், இயக்குநர் பி.வாசு. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து சன் பிக்சர்ஸ் வெளியேற்றிவிட்டதாகவும் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. அதை படக்குழு இன்று உறுதிப்படுத்தியுள்ளது. 'சந்திரமுகி 2' படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதை, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு மரகதமணி இசை அமைக்கிறார். ராகவா லாரன்ஸுடன் வடிவேலுவும் இணைகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in