டபுள் டமாக்கா... குழந்தைகளின் முகத்தை முதல்முறையாகக் காட்டிய பிரபல சீரியல் நடிகை!

நடிகை ஸ்வேதா
நடிகை ஸ்வேதா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘சந்திரலேகா’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா. இவருக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் அவர்களின் முகத்தை அவர் முதல் முறையாகக் காட்டியுள்ளார்.

சன் டிவியில் கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் ‘சந்திரலேகா’. இந்த சீரியலில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ ஜி.எஸ், சந்தியா ஜகர்லமுடி, பந்தேகர், தனுஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். ஏ.பி.ராஜேந்திரன் இந்த சீரியலை இயக்கி இருந்தார். ஒளிபரப்பான எட்டு வருடங்களும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இந்த சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா. ‘ஆழ்வார்’ படத்தில் அஜித்தின் தங்கை கதாபாத்திரம், ஜெயம் ரவியின் ‘பூலோகம்’ உள்ளிட்ட ஒருசில படங்களிலும் நடித்தார். பின்பு, ‘சந்திரலேகா’, ‘மகள்’, ‘செம்பருத்தி’ ஆகிய சீரியல்களில் நடித்தார் ஸ்வேதா.

ஸ்வேதா-மால் முருகன் தம்பதி
ஸ்வேதா-மால் முருகன் தம்பதி

இவர், கடந்த ஆண்டு நடிகராகவும் தொகுப்பாளராகவும் இருந்த மால் முருகனைத் திருமணம் செய்து கொண்டார். இந்த ஆகஸ்ட் மாதத்தில் இவர்களுக்கு ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இந்த நிலையில், தங்களது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி இருந்தனர்.

மகனுக்கு கிரிதன் கிருஷ்ணா என்றும் மகளுக்கு சர்வஸ்ரீ என்றும் பெயர் வைத்திருந்தனர். மேலும், முதல் முறையாக தங்களது குழந்தைகளின் புகைப்படங்களையும் இந்த தம்பதி பகிர்ந்துள்ளது. ரசிகர்கள் குழந்தைகளுக்குத் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in