இளையராஜாவின் மெட்டுக்குப் பாட்டெழுத அனைவருக்கும் ஒரு வாய்ப்பு!

இளையராஜாவின் மெட்டுக்குப் பாட்டெழுத அனைவருக்கும் ஒரு வாய்ப்பு!

இசையமைப்பாளர் இளையராஜா தற்போது ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார்.

தனது ட்விட்டரில் பக்கத்தில் சில தினங்களுக்கு முன் ஒரு பாடல் மெட்டைப் பதிவிட்டு, அந்தப் பாடல் இடம்பெற வேண்டிய சூழலையும் அவரே விளக்கி, அந்த மெட்டுக்கேற்ற பாடலை எழுதி அனுப்புமாறு அவர் ரசிகர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து பல ரசிகர்கள் தமிழில் பாடல்கள் எழுதி அனுப்பிவருகின்றனர். ஆனால் பல்வேறு மொழிகளிலும் பாடலை அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார் இளையராஜா.

பாடல் எழுத வேண்டிய மெட்டு:

தனக்கு வரும் பாடல் வரிகளில் சிறந்த பாடலை நான் தேர்ந்தெடுப்பேன் என்று கூறியுள்ளார் இளையராஜா.

பாடலுக்கான சூழல் 'ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தனது காதலியோ அல்லது காதலனையோ சந்திக்கச் செல்கிறார். அப்போது அங்கு நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தும் நீண்ட நேரமாக வரவேண்டியவர் வரவில்லை. அந்தச் சமயத்தில் உள்ள மனநிலையைக் கொண்டு பாடல் வரிகளை எழுத வேண்டும். நீங்கள் பாடல், கவிதை எழுதும் ஆர்வம் இருப்பவர் என்றால், உங்கள் பாடல்களை இளையராஜாவுக்கு அனுப்பிவைக்கவும்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in