பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்டங்கள்!

மகளின் பொங்கலை ரசித்த சிவகார்த்திகேயன்
சூர்யா- ஜோதிகா
சூர்யா- ஜோதிகா

அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பொங்கல் கொண்டாட்டத்தை தங்கள் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

``அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்'' என்று கூறி தங்கள் பொங்கல் கொண்டாட்டப் படத்தை ட்விட்டர் பக்கத்தியில் சூர்யாவும் ஜோதிகாவும் பகிர்ந்துள்ளனர்.

``அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்'' என்று பதிவிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், தனது மகள், மனைவியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். மேலும் தனது மகள் வைத்த பொங்கலை சிவகார்த்திகேயன் ரசிக்கும் படத்தை பகிர்ந்துள்ளார்.

மனைவி சவுமியாவுடன் அன்புமணி
மனைவி சவுமியாவுடன் அன்புமணி

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சவுமியாவுடன் தைலாபுரத்தில் தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை இன்று கொண்டாடினார். தனது ட்விட்டர் பக்கத்தில் அன்புமணி, "தைப்பொங்கலைப் போல தமிழர்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் பொங்கட்டும். தமிழர்களின் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ஆளூர் ஷாநவாஸ்
ஆளூர் ஷாநவாஸ்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை தொகுதி எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் தனது குடும்பத்தோடு வீட்டு வாசலில் பொங்கல் வைத்து கொண்டாடினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in