இந்தி ’வலிமை’க்கும் அதே சான்றிதழ்!

’வலிமை’- அஜித்
’வலிமை’- அஜித்

’வலிமை’ படத்தின் இந்திப் பதிப்புக்கும் யு/ஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும் படம் 'வலிமை'. 'நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள படம் இது. அஜித் ஜோடியாக, இந்தி நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். சுமித்ரா, ராஜ் ஐயப்பா, யோகிபாபு, புகழ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தை மறைந்த நடிகை, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 24-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில், வலிமை படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருந்தது. கூடவே 15 இடங்களில் திருத்தத்தையும் செய்திருந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் இந்தி பதிப்புக்கும் சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழை வழங்கி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in