விவசாய நிலத்தில் கார் ரேஸ்: பிரபல நடிகர் மீது வழக்கு

விவசாய நிலத்தில் கார் ரேஸ்: பிரபல நடிகர் மீது வழக்கு

அனுமதியின்றி கார் பந்தயம் நடத்தியதாக பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்தவர், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழில் வெளியாகியுள்ள ’விசித்திரன்’ படத்தின் ஒரிஜினலான ’ஜோசப்’ படத்தில் நடித்தவர் இவர்தான்.

தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர், சில படங்களை தயாரித்தும் உள்ளார். இவர் கேரள மாநிலம் வாகமணில் உள்ள எஸ்டேட் ஒன்றில், தனது விலையுயர்ந்த ஜீப்பில், கார் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகின.

விவசாயம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்ட பகுதியில், அனுமதி இன்றி பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறி, நடிகர் ஜோஜு ஜார்ஜ் மீது கேரள மாணவர் சங்கம் போலீஸில் புகார் அளித்தது. இதையடுத்து இடுக்கி மாவட்ட ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.