லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு கடிகாரம், உங்களுக்கு கமல் என்ன கொடுத்தார்?: நிருபரின் கேள்விக்கு அனிருத் பளிச் பதில்!

லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு கடிகாரம், உங்களுக்கு கமல் என்ன கொடுத்தார்?: நிருபரின் கேள்விக்கு அனிருத் பளிச் பதில்!

‘விக்ரம்’ படம் வெற்றி பெற்றதற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு கார், சூர்யாவிற்கு கடிகாரம் பரிசளித்த கமல்ஹாசன், உங்களுக்கு என்ன கொடுத்தார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு இசையமைப்பாளர் அனிருத் பதில் அளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் வசூல் 300 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இனி வரும் காலங்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே நடிகர் கமல்ஹாசன் 'விக்ரம்' படத்தின் வெற்றிக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார் ஒன்றையும், படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் பைக்கையும் பரிசாக அளித்தார். அத்துடன் 'விக்ரம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரத்தைப் பரிசாக அளித்தார்.

இந்நிலையில் 'விக்ரம்' படம் வெற்றியைத் தொடர்ந்து கேரளாவில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பல கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

அப்போது நிருபர் ஒருவர், விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு கடிகாரம் கொடுத்தார். அனிருத்துக்கு என்ன கொடுத்தார் எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு அனிருத் சற்றும் யோசிக்காமல்," 'விக்ரம்' படம் கொடுத்தார்" என்று பதிலளித்தார். இதைக் கேட்ட அரங்கத்திலிருந்தோர் வாய் விட்டுச் சிரித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in