`பீஸ்ட்' குறித்து ட்வீட் போட்ட கேப்டன்: சர்வதேச அளவில் டிரெண்டாக என்ன காரணம்?

`பீஸ்ட்' குறித்து ட்வீட் போட்ட கேப்டன்: சர்வதேச அளவில் டிரெண்டாக என்ன காரணம்?

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள `பீஸ்ட்' படம் உலக அளவில் டிரெண்டாகி வருகிறது.

அண்மையில் நடிகர் விஜய் நடித்து வெளியாகிய 'பீஸ்ட்' படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. இந்த படத்தில் 'ரா' உளவுத் துறை அதிகாரியாக நடித்துள்ள விஜய், கிளைமாக்ஸில் தன்னந்தனியாக பாகிஸ்தானுக்குள் ஜெட் விமானத்தில் சென்று தீவிரவாதிகளின் தலைவனை பிடித்து வருவார். அப்போது, பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்தும் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து அவர் லாவகமாக தப்பித்து வருவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில், நேற்றிரவு முதலாக 'பீஸ்ட்' திரைப்படம் சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகிறது. ஓய்வுப்பெற்ற இந்திய விமானப் படை விமானி சிவராமன் சஜ்ஜன் வெளியிட்ட ட்வீட்டே இந்த டிரெண்டிங்குக்கு காரணமாக அமைந்துள்ளது. அந்த படத்தின் ஒரு காட்சியை வீடியோவாக ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் அவர், "இதில் எனக்கு ஏராளமான கேள்விகள் இருக்கின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் பதிவைதான் தற்போது நெட்டீசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

போர் விமானங்களை இயக்கும் பயணிகள் ஆக்சிஜன் மாஸ்க்கும், ஹெல்மெட்டும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ஏனெனில் ஜெட் விமானம் செல்லும் வேகத்தில் நமக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். மேலும் காற்றின் வேகத்திலும், ஜெட்டின் ஒலியிலும் காது சவ்வுகள் கிழிந்து விடும். இதன் காரணமாகவே ஆக்சிஜன் மாஸ்க்கையும், ஹெல்மெட்டையும் விமானிகள் அணிந்திருப்பார்கள். ஆனால், குறிப்பிட்ட சீனில் விஜய் மாஸ்க்கும் அணிந்திருக்க மாட்டார். ஹெல்மெட்டையும் அணிந்திருக்க மாட்டார். நிஜத்தில் இது சாத்தியமே இல்லாதது. "ஒரு திரைப்படத்தில் லாஜிக் மீறல் இருக்கலாம்; தவறில்லை. ஆனால் லாஜிக்கே இல்லாமல் இருப்பதுதான் தவறு" எனவும் நெட்டீசன்கள் கமென்ட் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in