தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ - பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ - பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு

தனுஷ், பிரியங்கா மோகன் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

கேப்டன் மில்லர்’ பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்கின் புகைப்படங்களை பகிர்ந்துள்ள தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், “மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘கேப்டன்மில்லர்’ பிரமாண்ட பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது’ என தெரிவித்துள்ளது. படப்பிடிப்பில் தனுஷ், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தை இயக்குகிறார். இந்தப் படம் 1930-40-களின் பின்னணியைக் கொண்ட கதையாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட இருக்கிறது. கேப்டன் மில்லர் இலங்கைப் போரில் போராளியாக இருந்த வல்லிபுரம் வசந்தன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் , செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in