ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மாதவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு காத்திருக்கு!

ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மாதவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு காத்திருக்கு!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மாதவன் ஆகியோருக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

பிரான்ஸில் வரும் 17-ம் தேதி கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கவுள்ள நிலையில், இந்திய நடிகர், நடிகைகளின் பட்டியலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய குழுவை, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வழிநடத்திச் செல்ல உள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் அக் ஷய் குமார், சேகர் கபூர் ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாகவும் நடிகைகள் நயன்தாரா, தமன்னா, பூஜா ஹெக்டே நடிகர்கள் நவாசுதீன் சித்திக்கி ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மாதவன் முதல் முதலாக இயக்கிய ராக்கெட்ரி: த நம்பி எஃப்கெட் திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையிடப்படுகிறது. அப்போது, மாதவனுக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

Related Stories

No stories found.