`ஆண், பெண் வேறுபாடு கூடாது; திறமைக்கு வாய்ப்பு தேவை'- கேன்ஸ் திரைப்பட விழா ஐஸ்வர்யா ராய் பேச்சு

`ஆண், பெண் வேறுபாடு கூடாது; திறமைக்கு வாய்ப்பு தேவை'- கேன்ஸ் திரைப்பட விழா ஐஸ்வர்யா ராய் பேச்சு

பிரான்ஸில் சர்வதேச 75-வது கேன்ஸ் திரைப்பட விழா மே 17-ம் தேதி தொடங்கியது. வரும் 22-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் இந்திய திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பாக நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர் பா.ரஞ்சித், நடிகைகள் தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய், பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

விழாவில் பெவிலியன் குழு சார்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தீபிகா படுகோனே பேசினார். "இந்த வருடம் நடுவர்கள் குழுவில் இந்தியா சார்பாக தான் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியான விஷயம். சினிமாவுக்குள் நான் நுழைந்த காலத்தில், என் திறமையை யாரும் பெரிதாக மதிப்பிட்டார்களா என தெரியவில்லை. ஆனால், அங்கிருந்து இன்று கேன்ஸ் விழாவின் நடுவராக இருப்பது பெருமிதமான ஒன்று.

இந்திய கலைஞர்களின் திறமை மீது எப்போதுமே எனக்கு நம்பிக்கை உண்டு. அவர்களுடைய திறமைதான் எங்களை இங்கு கொண்டு வந்திருக்கிறது. அவர்கள் திறமை மீது எப்போதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தியர்கள் கேன்ஸ் விழாவில் பங்கேற்பது என்ற நிலை மாறி, இந்தியாவில் கேன்ஸ் விழா விரைவில் நடைபெறும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதேபோல, இந்த வருடமும் நடிகை ஐஸ்வர்யா ராயின் ரெட் கார்ப்பெட் உடையும் அவரது பேச்சும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவரும் நடுவராக பங்கேற்றுள்ளார். இந்த வருடமும் அவர் தன் கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டுள்ளார்.

திரைப்பட விழாவில், அவர் அளித்துள்ள பேட்டியில், "பெண்கள் இல்லாமல் திரைப்படம் செய்ய முடியாது என்ற ஊக்கத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அவர்கள் இன்னும் வெளிச்சம் போட்டு காண்பிக்க பட வேண்டும். ஒரு திரைப்படம் உருவாவதற்கு பெண்களின் பங்கு திரைக்கு முன்னும் பின்னும் எங்கேயுமே தவிர்க்க முடியாதது. எனவே ஆண், பெண் என வேறுபாடின்றி திறமைக்கும் ஆதரவும் வாய்ப்பும் தேவை" என கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in