என்னது, இன்ஸ்டா மூலம் சமந்தாவுக்கு இவ்வளவு வருமானமா?

என்னது, இன்ஸ்டா மூலம் சமந்தாவுக்கு இவ்வளவு வருமானமா?

இன்ஸ்டாகிராம் மூலம் நடிகை சமந்தாவுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார், சமந்தா. இப்போது `சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்துள்ள அவர், யசோதா, குஷி படங்களில் நடித்து வருகிறார். ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களிலும் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக செயல்படும் நடிகை சமந்தா, அவ்வப்போது சில பொருட்களையும் அதில் விளம்பரப்படுத்துவார். சமீபத்தில் கூட விலையுயர்ந்த பிகினி பிராண்ட் ஒன்றை விளம்பரப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், அப்படி விளம்பரப்படுத்தும் பொருட்களுக்காக, அவர் வாங்கும் ஊதியம் எவ்வளவு என்று தெரியவந்துள்ளது. நடிகை சமந்தா மாதத்தில் இரண்டு அல்லது மூன்று பிராண்ட்களின் விளம்பர வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதன் மூலம் அவருக்கு மாதம் ரூ.3 கோடி வருமானம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in