'திருமணம் செய்யாமலேயே தாயாக முடியும்': சர்ச்சையில் சிக்கிய நடிகை தபு

'திருமணம் செய்யாமலேயே தாயாக முடியும்': சர்ச்சையில் சிக்கிய நடிகை தபு

திருமணத்திற்கும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கும் குழந்தைக்கு தாயாக ஆசை உள்ளது. அதற்கான நான் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை என்று நடிகை தபு கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது.

தமிழில் 'காதல்தேசம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தபு. இதனைத் தொடர்ந்து 'இருவர்', 'சிறைச்சாலை', 'தாயின் மணிக்கொடி', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'டேவிட்', 'சினேகிதி' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த நடிகை தபு, பிரபல மாடலாவார். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். எப்போதும் வெளிப்படையான கருத்துக்களைக் கூறி வரும் நடிகை தபு அளித்துள்ள ஒரு பேட்டி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து அந்த பேட்டியில் அவர், “திருமணத்திற்கும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கும் குழந்தைக்கு தாயாக ஆசை உள்ளது. அதற்கான நான் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை. திருமணம் செய்யாமலேயே தாயாக முடியும். வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.அவரின் கருத்து தற்போது சமூக இணையதளங்களில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 51 வயதாகும் நடிகை தபு திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in