சர்சைக்குரிய விளம்பரத்தில் நடிகர் சரத்குமார்!

விளம்பரத்தில் நடிகர் சரத்குமார்
விளம்பரத்தில் நடிகர் சரத்குமார்

ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார் நடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சரத்குமார்
நடிகர் சரத்குமார்

'சுப்ரீம் ஸ்டார்' என தன் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சரத்குமார். நடிகர் மட்டுமல்லாது, சமத்துவ மக்கள் கட்சி என்னும் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார் சரத்குமார். தமிழகத்தில் அண்மைக்காலமாக ஆன்லைன் ரம்மி விளையாற்ட்டு மோகம் அதிகரித்துள்ளது. இதனால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகம். இதனால் பல தரப்பினரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இப்படியான சூழலில் சரத்குமார் ஆம்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கும்வகையில் விளம்பரத்தில் நடித்திருப்பது பலதரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து குமரிமாவட்டம், பறக்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் உமா மகேஸ்வரன் கூறுகையில், “சரத்குமார் மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்ல. எம்.பி, எம்எல்ஏ என பல்வேறு மக்கள் பிரதிநிதித்துவ பொறுப்புகளிலும் இருந்தவர். அதுமட்டும் இல்லாமல் சமத்துவ மக்கள் கட்சியையும் நடத்தி வருகிறார். நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்பது உள்பட பல உயரிய பதவியிலும் இருந்தவர். அவர் முகத்திற்கும், கருத்திற்கும் ஒரு மதிப்பு உண்டு. அவரை பின் தொடரும் ரசிகர்கள் இன்றும் அதிகம். அதிலும் குறிப்பாக எழுபதை நெருங்கும் நிலையிலும் கட்டுக்கோப்பாக இருக்கும் அவரது உடல் அமைப்பிற்கு இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர்.

இப்படியெல்லாம் இருக்கும் சரத்குமார், ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கும்வகையில் விளம்பரங்களில் நடிப்பது அபத்தம். லாட்டரி சீட்டு எப்படி அனைத்துவகையான மக்களின் உழைப்பை வாரிச் சுரண்டியதோ, அதன் நவீன வடிவம்போல் இன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பலரும் தங்களின் சம்பாத்தியத்தையெல்லாம் இழந்து வருகின்றனர். அவர் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்காமல் இருக்கவேண்டும் ”என்றார் அவர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in