இறைவனின் அருளால் தற்போது பேசிக்கொண்டிருக்கிறேன்: அமெரிக்காவிற்கு சிகிச்சைக்குச் செல்லும் முன் டி.ராஜேந்தர் கண்ணீர் பேட்டி

இறைவனின் அருளால் தற்போது பேசிக்கொண்டிருக்கிறேன்: அமெரிக்காவிற்கு சிகிச்சைக்குச் செல்லும் முன் டி.ராஜேந்தர் கண்ணீர் பேட்டி

இறைவனை மீறி எதுவும் நடக்காது. எல்லாம் விதிப்படிதான் நடக்கும். இறைவனின் அருளால் தற்போது பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கண்ணீர் மல்க இயக்குநர் டி.ராஜேந்தர் கூறினார்.

இயக்குனர் டி ராஜேந்தர் கடந்த 19-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து அவர் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக செல்ல இருப்பதாகவும், அதற்காக ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ள சிம்பு சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று இரவு அமெரிக்கா செல்லும் டி ராஜேந்தர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " என் உடல்நலன் குறித்து விசாரித்த முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஜி.கே.வாசன், கமல்ஹாசன், பாரிவேந்தர், ஐசரி கணேஷ் ஆகியோருக்கு என் நன்றி" என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில்," நான் எதையும் மறைத்தது கிடையாது. மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. ஆனால் அதே நேரத்தில் என்னதான் பிரார்த்தனை செய்தாலும் விதி என்று ஒன்று இருக்கிறது. அந்த விதியைத் தாண்டி எதுவும் நடக்காது. எனது மகன் சிலம்பரசனுக்காகத்தான் நான் அமெரிக்கா சொல்கிறேன்" என்று அவர் கண்ணீருடன் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in