நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டி!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டி!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் ஆட்டோ சின்னம் கேட்ட விஜய் மக்கள் இயக்கத்தில் கோரிக்கையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்திருந்தது.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் தனித்து போட்டியிடுவதாக அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

விஜய்
விஜய்

அதில் அவர் கூறியிருப்பதாவது: விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல், தனித்து போட்டியிடுகிறது. எனவே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக, அனைத்து மாவட்ட தலைவர்களும், அணி தலைவர்களும் ஒன்றிய, நகர பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும் தொண்டர்களும், ரசிகர்களும் முழு வீச்சில் பிரச்சாரம் செய்து விஜய் மக்கள் இயக்கம் செய்துள்ள நற்பணிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நம் இயக்க வேட்பாளர்களை வெற்றிப் பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in