1998-ல் நடந்த கொடுமை என்ன?- காவலர் பயிற்சி மையத்தில் `டாணாக்காரன்' ஒளிபரப்பு

1998-ல் நடந்த கொடுமை என்ன?- காவலர் பயிற்சி மையத்தில் `டாணாக்காரன்' ஒளிபரப்பு

காவல்துறையின் சாகசங்களை மட்டும் திரைத்துறையில் பார்த்த தமிழர்களுக்கு காவலர்களின் கண்ணீர் கதையை `டாணாக்காரன்' திரைப்படத்தில் இயக்குநர் தமிழ் சொல்லியுள்ளார். இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், போஸ்வெங்கட், மதுசூதனராவ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

காவல்துறை பயிற்சிப் பள்ளியில் நடக்கும் பிரச்சினைகளையும், நடைமுறைச் சிக்கல்கள், சாதியப் பாகுபாடு, லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சிக்கல்களை பேசியுள்ளது. சுதந்திரப் போராட்டம் குறித்து சிந்திப்பதை தடுக்கவும், மக்களை ஒடுக்கவும், ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட காவல்படையும், அதன் பயிற்சி முறைகளும் எவ்வித கேள்வியுமில்லாமல் தொடர்ந்து வருவதையும், பல முன்னாள் ஐ.பி.எஸ்கள், ஐ.ஏ.எஸ்.கள் தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி இந்த சிஸ்டத்தை சரிசெய்யாமல் வேலையை விட்டு வந்துகொண்டிருப்பதை நினைவூட்டியுள்ளது.

1998-ம் ஆண்டு இப்படத்தில் காவலர்களாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சிப்பள்ளிக்கு செல்பவர்களுக்கு அங்கு நடக்கும் கொடுமைகளை இத்திரைப்படம் வெளிக்கொண்டுவந்துள்ளது. இத்திரைப்படத்தை தமிழகத்தில் உள்ள 43 காவலர் பயிற்சிப்பள்ளியில் ஒளிபரப்ப காவலர் பயிற்சி துறை தலைவர் அருண் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.