‘யாரையும் புண்படுத்தலைன்னு நினைக்கிறேன்’- மூன்றாவது திருமணம் செய்துகொண்ட பாடகி!

‘யாரையும் புண்படுத்தலைன்னு நினைக்கிறேன்’- மூன்றாவது திருமணம் செய்துகொண்ட பாடகி!
Jordan Strauss

மூன்றாவது திருமணம் செய்துகொண்ட பிரபல பாப் பாடகி வெளியிட்டுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவர் கடந்த 2004-ம் ஆண்டு ஜேசன் என்பவரைத் திருமணம் செய்து, 55 மணி நேரத்திலேயே பிரிந்தார். பின்னர், கெவின் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணமும் நீடிக்கவில்லை. கடந்த 2007-ல் அவரையும் விவாகரத்து செய்தார் பிரிட்னி.

இந்நிலையில், 40 வயதான பிரிட்னி, தன்னை விட 12 வயது குறைந்த சாம் அஸ்காரி என்பவரைக் காதலித்து வந்தார்.

இவர்கள் இப்போது திருமண வாழ்வில் இணைந்திருக்கின்றனர். இவர்களின் திருமணம் கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் நடந்தது. பிரபல பாப் பாடகர்கள் மடோனா, பாரிஸ் ஹில்டன், செலினா கோமஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்தத் திருமணத்தில், பிரிட்னியின் முதல் கணவர் ஜேசன் அத்துமீறி நுழைந்ததால் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார் பிரிட்னி. திருமணத்தில் நடந்த விருந்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், “நான் யாரையும் காயப்படுத்தவில்லை என நினைக்கிறேன்” என்று பிரிட்னின்தெரிவித்துள்ளார். அவரது முதல் கணவர் கைது செய்யப்பட்டதற்காக இப்படி சொல்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in