`காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநருக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அழைப்பு

`காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநருக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அழைப்பு
விவேக் அக்னிகோத்ரி

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட இயக்குநர் விவேக் அக்னிகோத்ரிக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

காஷ்மீரில், 1990-ம் ஆண்டுகளில் இந்து பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என மிரட்டப்பட்டனர். இதனால், லட்சக்கணக்கானோர் வாழ்விடங்களை விட்டு வெளியேறினர்.

அப்போது, நடத்தப்பட்ட தாக்குதல்கள், அவர்கள் உயிர்பயத்துடன் வெளியேறிய சம்பவங்களை கொண்டு, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படம் இந்தியில் உருவாகி இருக்கிறது. விவேக் அக்னிகோத்ரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அவரது மனைவி பல்லவி ஜோஷி, மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

விவேக் அக்னிகோத்ரி, பல்லவி ஜோஷி
விவேக் அக்னிகோத்ரி, பல்லவி ஜோஷி

இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரிக்கு, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. காஷ்மீர் பண்டிட்டுகளின் அவல நிலை குறித்து பேச அந்த நாடாளுமன்றம் அழைப்பு விடுத்துள்ளதாக விவேக் அக்னிகோத்ரி தெரிவித்துள்ளார்.

’’என்னையும் என் மனைவி பல்லவியையும் அழைத்திருக்கிறார் கள். அடுத்த மாதம் அங்கு செல்ல இருக்கிறோம். காஷ்மீர் பண்டிட்டுகளின் இனப்படுகொலை பற்றிய செய்தியை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்லும் நோக்கத்துடன்தான் அந்தப் படம் எடுக்கப்பட்டது. இதுபற்றி பேச பிரிட்டிஷ் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்று அக்னிகோத்ரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.