ஒரு நாள் முன்பே ரிலீஸ் ஆகும் `புல்லட் டிரெய்ன்’

ஒரு நாள் முன்பே ரிலீஸ் ஆகும் `புல்லட் டிரெய்ன்’

பிராட் பிட் நடித்துள்ள ஹாலிவுட் படமான ’புல்லட் டிரெய்ன்’ ஒரு நாள் முன்பே இந்தியாவில் வெளியாகிறது

பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட், ஜோய் கிங், ஆரோன் டெய்லர்- ஜான்சன், ஆண்ட்ரூ கோஜி, சாண்ட்ரா புல்லக் உட்பட பலர் நடித்துள்ள படம், ’புல்லட் டிரெய்ன்’. அடோமிக் பிளாண்டே, டெட்பூல் 2, பாஸ்ட் அண்ட் பியூரியஸ் பிரசன்ட்ஸ் படங்களை இயக்கிய டேவிட் லீட்ச் (David Leitch) இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

நகைச்சுவை கலந்த படமான இது, அமெரிக்காவில் ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியாகிறது. இந்தியாவில் அதற்கு ஒரு நாள் முன்பு வெளியாக இருக்கிறது.

பிராட் பிட் 2019-ம் ஆண்டிற்குப் பிறகு பெரிய திரைக்குத் திரும்பி இருக்கும் படம் என்பதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில், இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in