விஜய்யை பார்க்க ஆர்வமிகுதியில் முண்டியடித்த ரசிகர் - புரட்டியெடுத்த பவுன்சர்கள்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

விஜய்யை பார்க்க ஆர்வமிகுதியில் முண்டியடித்த ரசிகர் - புரட்டியெடுத்த பவுன்சர்கள்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

நேற்று நடந்த ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய்யை பார்க்க முண்டியடித்து வந்த ரசிகர் ஒருவரை பவுன்சர்கள் புரட்டியெடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் ஏராளமான ரசிகர்கள் விஜய்யை பார்க்க வேண்டும் என காத்திருந்தனர். நிகழ்ச்சியின் போது விஜய்யை பார்க்க மேடையின் அருகே சென்ற ஒரு ரசிகரை, பாதுகாப்புக்காக இருந்த பவுன்சர்கள் ரவுண்டு கட்டி அடித்து இழுத்து போகும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆர்வ மிகுதி காரணமாக சில ரசிகர்கள் விஜய்யை பார்க்க அவருடைய அருகே சென்றனர். அவர்களை எச்சரித்து அனுப்பாமல் எப்படி அடிக்கலாம் என பலர் ட்ரெண்ட் செய்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். நேற்றைய இசைவெளியீட்டு விழாவில் பேசிய விஜய் அனைவரின் மீது அன்புதான் உலகை ஜெயிக்கக்கூடிய விஷயம் என்று ஒரு குட்டிக்கதையை சொன்னார். மேலும், ரசிகர்களின் அன்புதான் தான் என்னுடைய மிகப்பெரிய போதை என்றும் அவர் பேசினார். இப்படி அன்பினைப் பற்றி மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே, அவரின் பவுன்சர்கள் ரசிகர் ஒருவரை புரட்டி எடுத்ததை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in