யுவன் -ஜிப்ரான்: வலிமையில் 2 இசையமைப்பாளர்களா?

யுவன் -ஜிப்ரான்: வலிமையில் 2 இசையமைப்பாளர்களா?

வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு நாள் நெருங்க, ரசிகர்களை திணறடிக்கும் அப்டேட்டுகள் வரிசை கட்டுகின்றன. அவற்றில் இடைச்செருகல் திணறலாய் படத்தின் இசையமைப்பாளர்கள் குறித்த கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

இதற்கு முன்னதாக விக்னேஷ் சிவன் எழுதிய 2 பாடல்கள் வலிமை திரைப்படத்திலிருந்து வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. இவை உட்பட வலிமை திரைபடத்தின் அனைத்து பாடல்களுக்கும் யுவன் சங்கரே இசை அமைத்துள்ளார். ஆனால் பின்னணி இசைக்கு யுவன் இசை இல்லை என்றும், அப்பணிகளை ஜிப்ரான் மேற்கொண்டுள்ளார் என்றும் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன் உண்மைத்தனமை இன்னமும் உறுதிசெய்யபடவில்லை.

ஆனபோதும், பிஜிஎம்கள் யுவனுடையது இல்லை என்ற தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்திருக்கிறது. ஏனெனில் ஆரம்பம், மங்காத்தா என அஜித்தின் பெருவெற்றி திரைப்படங்களின் தனித்துவ பின்னணி இசைக்கு சொந்தக்காரர் யுவன். இந்த ஏமாற்றத்தை செரிக்கும் வகையில், அவருக்கு பதிலாக ஜிப்ரான் பின்னணி இசையமைத்திருகிறார் என்ற தகவலும் சேர்ந்திருக்கிறது.

பின்னணி இசையில் யுவனுக்கு பதில் ஜிப்ரான் பங்களித்திருக்கிறார் என்ற தகவலும் ரசிகர்களுக்கு பெரிதாய் ஏமாற்றம் தரவிலை. காரணம் ராட்சசன் என்ற படம் அதன் பின்னணி இசைக்காக இன்றைக்கும் பேசப்பட்டு வருவதை, தமிழ் கூறும் திரையுலகம் மறக்கமுடியாதது. தீரன் அதிகாரம் ஒன்று என்ற இயக்குநரின் முந்தைய திரைபடத்தில், ஜிப்ரானுடனே ஹெச்.வினோத் கூட்டு சேர்ந்திருந்தார். அந்த வகையில் வலிமையிலும் பின்னணி இசை அமைத்திருக்கிறார். வலிமையின் இதுவரை வெளியான ஜிப்ரானின் பிஜிஎம் துண்டுகளும் சோடை போகவில்லை.

யுவன், ஜிப்ரான் என இருவர் வலிமைக்குள் வந்தது எப்படி, அதன் தேவை என்ன என்பதான கேள்விகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன. மற்றபடி தங்கள் எதிர்பார்ப்புகளில் எவரும் குறைவைக்கவில்லை என்பதே ரசிகர்களின் தீர்ப்பாக இருக்கின்றன.

Related Stories

No stories found.