ஸ்ரீதேவி உடனான முதல் - கடைசி புகைப்படங்கள்

நினைவுநாளில் போனி கபூர் நெகிழ்ச்சி!
மனைவி ஸ்ரீதேவியுடன் போனி கபூர்
மனைவி ஸ்ரீதேவியுடன் போனி கபூர்

மனைவி ஸ்ரீதேவியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடனான முதல் மற்றும் கடைசி புகைப்படங்களை பதிவிட்டு, கணவர் போனி கபூர் நெகிழ்ச்சி பிரதிபலித்துள்ளார்.

ஸ்ரீதேவியுடன் -கடைசி புகைப்படம்
ஸ்ரீதேவியுடன் -கடைசி புகைப்படம்

தனது நடிப்பு, அழகு இன்ன பிற நட்சத்திர சிறப்புகளால் கோடிக்கணக்கான ரசிக உள்ளங்களை வென்றவர் நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குமரியாக இளையஞர்களை வசீகரித்து, வயதுக்கேற்ற முதிர்ச்சியான நடிப்பால் ரசிக பரப்பை மேலும் பெருக்கி வந்த ஸ்ரீதேவி, 5 ஆண்டுகளுக்கு முன்னர் அகாலமாக மறைந்தார்.

2018, பிப்ரவரி இதே நாளில் உறவினர் திருமண விழாவில் பங்கேற்க துபாய்க்கு குடும்பத்தோடு சென்ற ஸ்ரீதேவி சடலமாக இந்தியா திரும்பினார். அவர் மறைந்ததன் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலியை ரசிகர்கள் பகிர்ந்து வருவதன் மத்தியில், மகள் ஜான்வி கபூர் மற்றும் கணவர் போனி கபூரின் சமூக ஊடகப் பதிவுகள் கவனம் பெற்று வருகின்றன.

ஸ்ரீதேவியுடன் -முதல் புகைப்படம்
ஸ்ரீதேவியுடன் -முதல் புகைப்படம்

தாயின் தடம்தொட்டு பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகையான மகள் ஜான்வி கபூர், ஒரு வாரம் முன்பிருந்தே ஸ்ரீதேவியின் நினைவுகளில் தோயும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். கணவரும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான போனி கபூரும் தனது சமூக ஊடகப் பதிவுகளில், மனைவி ஸ்ரீதேவி உடனான புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ந்து வருகிறார்.

ஸ்ரீதேவி உடனான கடைசி புகைப்படமாக, துபாய் திருமண விழாவில் உறவினர்கள் மத்தியில் தோன்றும் படத்தை நேற்று போனி கபூர் பதிவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, மனைவி ஸ்ரீதேவி உடனான முதல் புகைப்படமாக கருப்பு - வெள்ளையிலான படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார். இளமை பொங்கும் தம்பதியராக காட்சியளிக்கும் போனி - ஸ்ரீதேவி இணைந்த அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இவற்றின் அங்கமாக தனக்கு மனைவி ஸ்ரீதேவி முத்தமிடும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார் போனி கபூர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in