‘துணிவு’ படத்தின் ரிலீஸ் தேதி - அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் போனி கபூர்!

‘துணிவு’ படத்தின் ரிலீஸ் தேதி - அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் போனி கபூர்!

அஜித்குமார் நடித்துள்ள ‘துணிவு’ படத்தின் ரிலீஸ் தேதியை, அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் ஜனவரி 12ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி களம் காண்கிறது. இந்த நிலையில் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் எந்த நாளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், ‘துணிவு’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக போனிகபூர் அறிவித்துள்ளார். இதன்படி ஜனவரி 11ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இரு படங்களின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in