`அடுத்தக் கட்டத்துக்குப் போயிட்டாங்க’: தென்னிந்திய இயக்குநர்களை புகழும் சல்மான்

சல்மான் கான்
சல்மான் கான்

தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள், சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றுவிட்டதாக நடிகர் சல்மான் கான் புகழ்ந்துள்ளார்.

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் ( IIFA Awards) ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டுக்கான விருது விழா, மே 20 மற்றும் 21-ம் தேதிகளில் அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் நடைபெறுகிறது. இந்த விழாவை இந்தி நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு மும்பையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் சல்மான் கான், தென்னிந்திய திரையுலகை பாராட்டினார்.

சல்மான் கான்
சல்மான் கான்

அவர் கூறியதாவது: ``தென்னிந்திய இயக்குநர்கள் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களுக்கான ரசிகர்களின் பரப்பளவும் அதிகரித்துள்ளன. இப்போது நான் சிரஞ்சீவியின் படத்தில் நடித்திருக்கிறேன். அவரும் நானும் நீண்ட நாள் நண்பர்கள். தென்னிந்திய திரைப்படங்கள் இந்தியில் நன்றாக ஓடுகின்றன. ஆனால், இந்தி படங்கள், ஏன் தென்னிந்தியாவில் வெற்றி பெறுவதில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

தென்னிந்திய இயக்குநர்கள், வித்தியாசமான கதைகளை படமாக்குகிறார்கள். அது சிறப்பாக இருக்கிறது. அவர்கள் கடினமாக உழைத்து, சிறந்த கதைகளை உருவாக்குகிறார்கள். நான் தென்னிந்திய படங்களை விரும்பிப் பார்க்கிறேன், ரசிக்கிறேன். ஆனால், தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க என்னை யாரும் நடிக்க அழைக்கவில்லை.''

இவ்வாறு நடிகர் சல்மான் கான் கூறினார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in