‘இந்தியன் 2’ படத்தில் இணையும் இந்தி நடிகர்: எகிறும் எதிர்பார்ப்பு!

‘இந்தியன் 2’ படத்தில் இணையும் இந்தி நடிகர்: எகிறும் எதிர்பார்ப்பு!

கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

'விக்ரம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றி, கமலின் மார்க்கெட்டை மிகப் பெரிய அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. இதனால், நீண்டகாலமாகக் கிடப்பில் கிடந்த ‘இந்தியன் 2’ படத்தைத் தூசுதட்டிய ஷங்கர் தற்போது முழுவீச்சில் இயக்கி வருகிறார். லைகா, ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கும் இப்படம் அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

திருப்பதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் 1920-களில் இருப்பது போல் செட் அமைக்கப்பட்டு காட்சிகள் எடுக்கப்பட்டன. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங்கும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவருக்கு மேக்கப் போடும் ஒளிப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில், பாலிவுட் பிரபலம் ஒருவரும் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது. பாலிவுட்டில் சுமார் 40 வருடங்களாக நடித்துவரும் குல்ஷன் குரோவர், இப்படத்தில் இணைந்துள்ளாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலுடன் அவர் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இதை உறுதிசெய்திருக்கின்றன. பாலிவுட்டின் சீனியர் நடிகர் இணைந்துள்ளது, ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமலின் ப்ளாஷ்பேக் காட்சிகளில் குல்ஷன் குரோவர் நடிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

அதேசமயம், ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர் படக்குழு தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அதனால், விரைவில் டைட்டில் டீஸர், ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது தீம் மியூசிக் என ஏதாவது ஒரு அப்டேட்டை படக்குழு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in