வேறொரு பெண்ணுடன் சென்றதால் ஆத்திரம்: தடுத்த மனைவி மீது கார் ஏற்றிய பாலிவுட் தயாரிப்பாளர் கைது!

வேறொரு பெண்ணுடன் சென்றதால் ஆத்திரம்: தடுத்த மனைவி மீது கார் ஏற்றிய பாலிவுட் தயாரிப்பாளர் கைது!

வேறொரு பெண்ணுடன் சென்றதால் ஆத்திரமடைந்த மனைவி தடுத்தபோது காரை ஏற்றிச் சென்றார் பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா. இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

பிரபல பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா. சர்மா ஜி கி லக் கயி, தேஹாட்டி டிஸ்கோ, காலி பாலி போன்ற பல படங்களை தயாரித்துள்ள இவர், மும்பையில் உள்ள அந்தேரி என்ற இடத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கமல் மிஸ்ரா தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் உள்ள கார் பார்க்கிங்கில் இருந்து தன்னுடைய காரை வெளியே எடுத்துள்ளார். அங்கு கமலின் மனைவி யாஸ்மின் அவரைத் தேடி சென்றுள்ளார்.

அப்போது கமல் மிஸ்ராவின் காருக்குள் வேறொரு பெண் இருந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த யாஸ்மின், கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கமல் மிஸ்ரா, காரை யாஸ்மின் மீது ஏற்றிவிட்டு சென்றார். இதில் யாஸ்மினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து காவல் நிலையத்தில் கணவர் மீது யாஸ்மின் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் யாஸ்மின் மீது காரை ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து, கமல் மிஸ்ராவை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in