மூன்றாவது முயற்சியில் செயற்கை முறையில் கர்ப்பம்... ஷாருக்கானிடம் சொல்லி அழுத பிரபலம்!

ஷாருக்கான் - ஃபரா கான்
ஷாருக்கான் - ஃபரா கான்

”இரண்டு முறை செயற்கை முறையில் கர்ப்பம் தரிக்க முயன்றேன். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. அந்த சமயத்தில் நடிகர் ஷாருக்கானிடம் தான் சொல்லி அழுதேன்” பாலிவுட் நடன இயக்குநர் ஃபரா கான் தெரிவித்துள்ளார்.

ஃபரா கான்
ஃபரா கான்

பாலிவுட்டில் இயக்குநர், டான்ஸ் மாஸ்டர், நடிகை எனப் பன்முகம் கொண்டவர் ஃபரா கான். இவர் செயற்கைக் கருத்தரிப்பு முறை மூலம் கடந்த 2008ஆம் ஆண்டு மூன்று குழந்தைகளுக்கு தாயானார். முதல் முயற்சியிலேயே இது அவருக்கு சாத்தியமாகவில்லை. இரண்டாவது முறையும் அது தோல்வியில்தான் முடிந்தது. பெண்களுக்கு இது அத்தனை எளிதாகக் கடக்கக் கூடிய விஷயம் இல்லை.

இந்த துயரமான காலத்தைக் கடந்து வந்தது பற்றியும் அப்போது நடிகர் ஷாருக்கானும் அவரது மனைவியும் எப்படி தனக்கு ஆறுதலாக இருந்தார்கள் என்றும் ஃபாரா கான் பகிர்ந்துள்ளார். அவர் பேட்டியில் பேசியிருப்பதாவது, “முதல் முறை குழந்தைக்காக நான் மருத்துவரை பார்க்கச் சென்றேன். பலரையும் போல முதல் முயற்சியிலேயே கர்ப்பமாகிவிட்டதாக நினைத்தேன். ஆனால், மாதவிடாய் வந்ததும் உடைந்து விட்டேன்.

குழந்தைகளுடன் ஃபரா கான்
குழந்தைகளுடன் ஃபரா கான்

இரண்டாவது முறை வெற்றி அடையும் என எதிர்பார்த்தேன். ஆனால், அது நடக்கவில்லை. அந்த சமயத்தில் ‘ஓம் சாந்தி ஓம்’ படப்பிடிப்புக்கு வர சொல்லி அழைப்பு வந்தது. உடைந்த மனதுடன் சென்றேன். வேலையில் கவனம் செல்லவே இல்லை. அப்போது ஷாருக், நான் சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டார். கேரவனுக்கு அழைத்துப் போய் என்னிடம் விசாரித்தார். அவரிடம் விஷயத்தை சொல்லி ஒரு மணி நேரம் அழுதேன்.

அதன் பிறகு மூன்றாவது முயற்சியில்தான் எனக்கு குழந்தை உருவானது. என் குழந்தைகள் பிறந்த அன்றே மருத்துவமனைக்கு நேரில் வந்து ஷாருக்கான் பார்த்தார். என் குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து மகிழ்ந்தார். என்னுடைய வளைகாப்பை அவரது மனைவி கெளரிகான் தான் நடத்தினார். அந்த சமயத்தில் எனக்கு எமோஷனலாக சப்போர்ட் கொடுத்தனர்” என பேசியுள்ளார் ஃபரா கான்.

இதையும் வாசிக்கலாமே...  

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in