‘டிஜிட்டல் இந்தியாவால் சிரமத்துக்கு ஆளானேன்’... பிரபல நடிகையின் சுவாரஸ்ய அனுபவம்!

ஹினா கான்
ஹினா கான்

டிஜிட்டல் இந்தியா எனப் பலரும் மார் தட்டிக் கொள்ளும் வேளையில், அதே டிஜிட்டல் இந்தியாவால் சமீபத்தில் தான் சந்தித்த துயரத்தைப் பகிர்ந்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான். அதாவது, யாசகர் ஒருவர் இந்த டிஜிட்டல் இந்தியா பெயரைச் சொல்லி தன்னிடம் அதிக பணம் எதிர்பார்த்த சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்தியில் சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் நடிகை ஹினா கான். பின்பு, படங்கள், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் காரில் சிக்னலில் தான் நின்று கொண்டிருந்தபோது யாசகர் ஒருவர் தன்னிடம் அதிக பணம் எதிர்பார்த்த அதிர்ச்சி சம்பவத்தை கூறியுள்ளார். அதாவது, காரில் க்ரீன் சிக்னலுக்காக காத்திருந்து இருக்கிறார் ஹினா.

அப்போது யாசகர் ஒருவர் அவரின் கார் கதைவைத் தட்டிப் பணம் கேட்டிருக்கிறார். கையில் பணம் இல்லாததை ஹினா அவரிடம் தெரியப்படுத்த ‘தம்பி, தங்கைகள் இருக்காங்க. எதாவது பண உதவி செய்யுங்க’ என அங்கிருந்து நகராமல் தொடர்ந்து ஹினாவை நச்சரித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

மீண்டும் தன்னிடம் பணம் கையில் இல்லை என்பதை அழுத்தமாகக் கூறி அவரை அனுப்ப முயற்சி செய்திருக்கிறார். உடனே அவர், ‘கூகுள் பே இருக்கு மேடம். நம்பர் கொடுக்கிறேன்’ எனச் சொன்னதும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் ஹினா. ‘சரி, பணம் அனுப்புவோம்’ என கூகுள் பே மூலம் பணம் பகிர முயற்சித்தபோது, ’ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் வேண்டும்’ எனக் கேட்டு மேலும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

இந்த விஷயங்களைத் தனது சமூகவலைதளத்தில் சொல்லி டிஜிட்டல் இந்தியா இப்படியான சிரமத்திற்கு என்னை ஆளாக்கியது என வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...  

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in