`ராஜமவுலி என் உணர்ச்சிகளை கொன்றுவிட்டார்'

ஆர்ஆர்ஆர் படத்தை கடுமையாக விமர்சிக்கும் பாலிவுட் நடிகர்
`ராஜமவுலி என் உணர்ச்சிகளை கொன்றுவிட்டார்'
ராஜமவுலி

``ராஜமவுலி சார் என் உணர்ச்சிகளை கொன்றுவிட்டீர்கள். என் அறிவு எல்லாம் இன்று பூஜ்ஜியமாகிவிட்டது'' என ஆர்ஆர்ஆர் படம் குறித்து பாலிவுட் நடிகர் கமால் கான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமவுலி இயக்கியுள்ள படம் `ஆர்ஆர்ஆர்’. டிவிவி தானய்யா தயாரித்துள்ள இந்தப் படத்தில் இந்தி நடிகை ஆலியா பட், நடிகர் அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி, வெளிநாட்டு நடிகை ஒளிவியா மாரிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இன்று வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பாலிவுட் நடிகர் கமால் கான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் கமால் கான்
பாலிவுட் நடிகர் கமால் கான்

இது குறித்து கமால் கான் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தப் படத்தை எடுத்தது தவறு என்று சொல்லமாட்டேன். இது மிகப்பெரிய குற்றம். 600 கோடி ரூபாய் செலவில் இப்படி ஒரு மோசமான படத்தை எடுத்த இயக்குநர் ராஜமவுலிக்கு குறைந்தது 6 மாதமாவது சிறை தண்டனை வழங்க வேண்டும். இந்திய சினிமா வரலாற்றில் இப்படி ஒரு மோசமான படத்தை பார்த்ததில்லை. ராஜமவுலி சார் என் உணர்ச்சிகளை கொன்றுவிட்டீர்கள். என் அறிவு எல்லாம் இன்று பூஜ்ஜியமாகிவிட்டது. இந்தியாவில் எடுக்கப்பட்ட மிக மோசமான படம் இது” என விமர்சித்துள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.