தீயாய் பரவிய வதந்தி... வீடியோவை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்!

நடிகர் தர்மேந்திரா
நடிகர் தர்மேந்திரா

பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா குறித்து நேற்று இரவு பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு வீடியோவை அவரே வெளியிட்டுள்ளார்.

நடிகர் தர்மேந்திரா
நடிகர் தர்மேந்திரா

பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா (87), கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டும், உயர் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக தனது தந்தை தர்மேந்திராவை, அவரது மகனும் பாலிவுட் நடிகருமான சன்னி தியோல் அமெரிக்காவிற்கு செப்.4-ம் தேதி அழைத்து சென்றார். அங்கு 15 முதல் 20 நாட்கள் வரை அவர்கள் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு திடீரென தர்மேந்திரா உடல்நிலை குறித்த வதந்தி தீயாய் பரவியது.

இந்த நிலையில், நடிகர் தர்மேந்திரா X சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு வீடியோவை இன்றுவெளியிட்டுள்ளார்.

அதில், “நண்பர்களே, நீண்ட நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரு சிறிய விடுமுறையை அனுபவித்து மகிழ்ந்தேன். விரைவில் எனது புதிய படத்திற்கு வருவேன். இந்த அன்பான செல்லப் பிராணி என்னைக் காதலிக்கிறது ” என்று ஒரு நாயுடன் விளையாடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in