திருமணத்தின் போது கூட உடல்கேலி: பதிலடி கொடுத்த மஞ்சிமா மோகன்

திருமணத்தின் போது கூட உடல்கேலி: பதிலடி கொடுத்த மஞ்சிமா மோகன்

திருமணத்தன்று கூட தான் உருவக்கேலிக்கு ஆளானதாக நடிகை மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.

சென்னையில் நடிகர் கவுதம் கார்த்திக்கிற்கும், நடிகை மஞ்சிமா மோகனுக்கும் கடந்த வாரம் காதல் திருமணம் நடந்தது. திரைப்பிரபலங்கள், நண்பர்கள் என கலந்து கொண்ட இந்தத் திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்களை அன்றே வெளியிட்டனர். இந்த நிலையில், திருமணத்தில் தனது புகைப்படங்களைப் பார்த்து உடல் எடை அதிகமாக இருப்பதாக பலர் கேலி செய்ததாக மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதகுறித்துப் பேசியுள்ள மஞ்சிமா மோகன், “திருமணத்தின் போது கூட நான் உடல் எடை அதிகமாக இருப்பதாகப் பலரும் என்னைக் கேலி செய்தனர். நான் தற்போதுள்ள உடல் எடையில் மிகவும் செளகரியமாகவே இருக்கிறேன். தேவைப்படும் போது என்னால் உடல் எடையைக் குறைக்கவும் முடியும்” என பதிலடி கொடுத்துள்ளார் மஞ்சிமா. அதேபோல, தேனிலவு குறித்தான கேள்விக்குப் பதிலளித்துள்ள மஞ்சிமா, ‘இன்னும் அது குறித்து முடிவு செய்யப்படவில்லை. கவுதம் கார்த்திக் தற்போது ‘பத்துதல’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக இருப்பதால் அதெல்லாம் முடித்து விட்டுதான் யோசிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in