ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் பாபி சிம்ஹா

ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் ’தடை உடை’ படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் என்.எஸ். ராகேஷ் இயக்கும் இந்தப் படத்தில் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நராங் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டெமல் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆதிஃப் இசை அமைக்கிறார்.

’தடை உடை’ தொடக்க விழா
’தடை உடை’ தொடக்க விழா

வைரமுத்து பாடல்களை எழுத, ஆக்‌ஷன் த்ரில்லர் கதையான இந்தப் படத்தை, முத்ராஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஆருத்ரா பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் பி. ராஜசேகர் மற்றும் ரேஷ்மி சிம்ஹா தயாரிக்கிறார்கள். இதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

இதன் படப்பிடிப்பு வரும் 5-ம் தேதி முதல் தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.