விஜயின் குட்டிக்கதையை பங்கமாய் கலாய்த்த புளூசட்டை மாறன்... வைரல் வீடியோ!

புளூசட்டை மாறன் விஜய்
புளூசட்டை மாறன் விஜய்

நேற்று நடைபெற்ற ‘லியோ’ வெற்றி விழாவில் விஜய் பேசியது பற்றி பற்றி சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் கலாய்த்து உள்ளார். இந்த பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து உள்ளதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். குறிப்பாக விஜய் பேசியது பற்றி ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் கலாய்த்து தனது ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

அவர் பதிவில், “ கமாண்டரின் குட்டிக்கதை: ஐந்து வருடங்களுக்கு முன்பு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் விமர்சனம் தமிழ் டாக்கீஸ் சேனலில் வந்தது. அதில்..இருவர் வேட்டைக்கு சென்றது, வில் அம்பு, ஈட்டி, யானை கதையை சொல்லி இருந்தேன். இந்த கதையை ஜெராக்ஸ் எடுத்து..கமாண்டருக்கு தந்துருக்கான் அவரோட ஸ்க்ரிப்ட் ரைட்டர்” என தெரிவித்து அந்த வீடியோவையும் இணைத்துள்ளார்.

அவர் தனது மற்றொரு பதிவில், “அடங்கோ!!மனித தோலில் செருப்பு தைத்தால் அந்த செருப்பு ஒருநாள் கூட உழைக்காது. அதனால, ஓவரா புல்லரிக்காம பேசுறது நல்லது” என்று தெரிவித்துள்ளார். மேலும் போதைப்பழக்கம் தொடர்பாக விஜய் பேசியதை விமர்சித்துள்ள புளூ சட்டை மாறன் , ‘லியோ’ படத்தில் கலெக்‌ஷன் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் விஜய் நேற்றைய விழாவில் பேசியது குறித்து பல்வேறு விதங்களில் கிண்டலடித்து புளூசட்டை மாறன் பதிவிட்டுள்ளதை, அவரின் ரசிகர்கள் கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in