‘ப்ளூ சட்டை’ மாறன் போலீஸில் புகார்

‘ப்ளூ சட்டை’ மாறன் போலீஸில் புகார்

சமூக வலைதளங்களில் திரைப்பட விமர்சனத்துக்குப் பேர் போனவர் இளமாறன். நீல நிற சட்டையுடன் விமர்சனம் செய்வதால் ‘ப்ளூ சட்டை’ மாறன் என்றே பார்வையாளர்களால் அழைக்கப்பட்டுவந்தார். யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்துவந்த மாறன், ‘ஆன்டி இண்டியன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ‘ஆன்டி இண்டியன்’ திரைப்படம் ஓடும் திரையரங்கத்தில் ரகளை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ப்ளூ சட்டை மாறன் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகாரில், “மூன் பிக்சர்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் ஆதம்பாவா என்பவரின் தயாரிப்பில் ‘ஆன்டி இண்டியன்’ என்ற படத்தை இயக்கியுள்ளேன். படம் வெளியாகி 240 தியேட்டர்களில் ஓடுகிறது. முறையாக தணிக்கை செய்து படத்தை வெளியிட்டுள்ளோம். தேனி மாவட்டம் பெரியகுளத்திலுள்ள திரையரங்கு ஒன்றில் ‘ஆன்டி இண்டியன்’ படத்தைத் திரையிடக்கூடாது என 10-க்கும் மேற்பட்ட நபர்கள் தகராறு செய்துள்ளனர். தங்களைத் தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் என்றும் கூறியுள்ளனர். மலிவான விளம்பரம், சுய அரசியல் லாபத்துக்காக ரகளை செய்து, எங்களிடம் பணம்பறிக்கும் நோக்கில் செயல்படும் நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ப்ளூசட்டை மாறன் கூறியுள்ளார்

‘ப்ளூ சட்டை’ மாறன் போலீஸில் புகார்
ஆன்டி இண்டியன் படத்தை நிறுத்திய பாஜகவினர்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in