'ட்விட் மூலம் குரைப்பது நல்லது கிடையாது குழந்தை': பிரபல நடிகர் மீது பாய்ந்த 'ப்ளூ சட்டை' மாறன்

'ப்ளூ சட்டை' மாறன்
'ப்ளூ சட்டை' மாறன்

சினிமா விமர்சகர் 'ப்ளூ சட்டை' மாறனை நடிகர் அசோக் செல்வன், "குரைக்கிற நாய் குறைக்கட்டும்" என ட்விட் செய்து அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தார். அதற்கு "குரைப்பது நல்லது கிடையாது குழந்தை. என்ஜாய் தி பிஸ்கட்" என ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுத்துள்ளார்.

சினிமா விமர்சகரான 'ப்ளூ சட்டை' மாறன், திரைப்படங்கள் வெளியானவுடன் அப்படங்கள் குறித்து சுடச்சுட விமர்சனம் செய்து வருகிறார்.திரை விமர்சனம் என்ற பெயரில் படங்களை மோசமாக 'ப்ளூ சட்டை' மாறன் பேசி வருகிறார் என்று சினிமா பிரபலங்கள் புகார் கூறி வருகின்றனர். இதற்கு ஒருபடி மேலே போய் இயக்குநர் பார்த்திபன், நடிகர் ஆர்ஜே.பாலாஜி ஆகியோர் 'ப்ளூ சட்டை' மாறனின் ட்ரோலுக்கு எதிர்வினையாற்றினர்.

இந்த நிலையில், நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் எல்லாமே ஃபிளாப் என 'ப்ளூ சட்டை'மாறன் போட்ட ட்விட் தற்போது காரசார விமர்சனமாகியுள்ளது.

நடிகர் அசோக் செல்வன்
நடிகர் அசோக் செல்வன்

இந்த ஆண்டு நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'மன்மத லீலை', 'ஹாஸ்டல்', 'வேழம்', 'நித்தம் ஒரு வானம்' ஆகிய படங்கள் ஃபிளாப் என்று' ப்ளூ சட்டை' மாறன் ட்விட் செய்திருந்தார். அத்துடன் சசிகுமார், அதர்வா நடித்த படங்களும் இந்த ஆண்டு தோல்வி அடைந்ததாக 'ப்ளூ சட்டை' மாறன் ட்விட் செய்திருந்தார்.

இந்த விமர்சனத்தால் நடிகர் அசோக் செல்வன் கொதித்துப் போனார். உடனடியாக "குரைக்கிற நாய் குரைக்கட்டும். அதை இக்னோர் செய்து விட்டு நாம் நம் வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்" என ட்விட்டர் செய்தார்.

'ப்ளூ சட்டை' மாறன் பெயரைப் பதிவிடாமல் அவர் ட்விட் செய்தாலும், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 'ப்ளூ சட்டை' மாறன் மீண்டும் ஒரு ட்விட்டை பதிவு செய்துள்ளார். அதில், "வருஷத்துக்கு 5 படம் ஃபிளாப் என்பது சரியான வளர்ச்சி இல்லை. தயாரிப்பாளர்களின் பணத்தை வீணாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ட்விட் மூலம் குரைப்பது நல்லது கிடையாது குழந்தை. என்ஜாய் தி பிஸ்கட்" என்று அசோக் செல்வனுக்கு பதிலடி தந்துள்ளார். இந்த விவாதம் சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in