வெப் சீரிஸில் உருவாகும் காமெடி காதல் கதை `கன்னி ராசி’

வெப் சீரிஸில் உருவாகும் காமெடி காதல் கதை `கன்னி ராசி’

காமெடியான காதல் கதையை கொண்ட வெப் சீரிஸாக ’கன்னி ராசி’ உருவாகி வருகிறது.

’ஆஹா கல்யாணம்’ என்ற முக்கோணக் காதல் கதையை தயாரித்த பிளாக்‌ஷீப் (Blacksheep) யூடியூப் குழு, இப்போது ’கன்னி ராசி’ என்ற தலைப்பில் காதல் தொடரை உருவாக்கி வருகிறது. பிளாக்ஷீப்பின் ஓடிடி தளத்துக்காக உருவாக்கப்படும் இந்தத் தொடரை அன்புதாசன் இயக்குகிறார்.

கன்னி ராசி வெப் தொடர் தொடக்க விழா
கன்னி ராசி வெப் தொடர் தொடக்க விழா

சேட்டை ஷெரிப் இதில் ஹீரோவாக நடிக்கிறார். இது வேடிக்கை நிறைந்த வலைத் தொடர். அபிஷேக் குமார், ஸ்வேதா, ஷாம்னி, பதின் குமார், அருண் கார்த்தி, குட்டி மூஞ்சி விவேக் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த கதை, சேட்டை ஷெரீப்-பை சுற்றி சுழல்கிறது, ஒரு நல்ல வேலையுடன் கச்சிதமான வாழ்க்கையை வாழவேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமல் இருக்கிறது.

ஒருவரை சந்தித்த பிறகு, அவனது கனவு வேலை கிடைக்கிறது. அதிலிருந்து அவன் வாழ்க்கை சிறப்பானதாக மாறுகிறது, எப்படி அவன் கனவு வேலையை அடைந்தான்? அவன் சந்தித்த அந்த ஒருவர் யார்? என்பதுதான் இந்த வலைதொடர். மொத்தம் 10 எபிசோட்களை கொண்ட தொடராக இது உருவாகிறது . இதன் படப்பிடிப்பு இப்போது தொடங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. ஃப்ரெட்ரிக் விஜய் ஒளிப்பதிவு செய்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in