
இன்று 51 வது பிறந்தநாள் காணும் திரைப்பட நடிகர் அஜித் குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்தின் 51 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தியும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். தமிழக அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் அவருக்கு தங்கள் சார்பில் போட்டிபோட்டுக் கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அவ்வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அஜித்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'பன்முகத் தன்மையுடன் தனக்கென்று தனி பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! எல்லாம் வல்ல இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் அவருக்கு கொடுக்க வேண்டுகின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.