சினிமா கலைஞர்களை வைத்து இந்தியைப் பரப்பப் பார்க்கிறது பாஜக! - இயக்குநர் அமீர்

சினிமா கலைஞர்களை வைத்து இந்தியைப் பரப்பப் பார்க்கிறது பாஜக! -  இயக்குநர் அமீர்

சினிமா கலைஞர்களை வைத்து இந்தியை வளர்க்கும் நடவடிக்கையை பாஜக எடுத்து வருவதாக இயக்குநர் அமீர் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் இயக்குநர் அமீர் கூறுகையில், “தமிழக மக்கள் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்தி தெரியாத மக்கள் வெளியேற வேண்டும் எனச் சொல்கிறார்கள். நாங்கள் நாட்டை விட்டு வெளியேற தயார். ஆனால், எது நாடு, யார், யார் இன மக்கள் என முதலில் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்," இந்தி பேச வேண்டும் என சொல்வது தான் பாசிசம். மொழி, இன வெறி இருக்கக்கூடாது, பற்று இருக்க வேண்டும். தமிழ் மக்களை தமிழ் இசையோடு வைத்தவர் இளையராஜா, ஒட்டுமொத்த இந்திய தேசமும் ஏ.ஆர்.ரகுமானை கொண்டாடியது. சினிமாவில் ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவில் புகழ்பெற்றதால் அவர் மும்பையில் விரட்டப்பட்டார், பாஜக சினிமா கலைஞர்களை வைத்து இந்தியை வளர்க்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது" என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், “தமிழ் கலைஞர்கள் வெளி மாநிலங்களில் தமிழ் குறித்து பேசுவதில்லை, சினிமா வாய்ப்பு பறிபோகும் நிலை வரும் என அச்சம்தான் அதற்கு காரணம். தமிழ் கலைஞர்களில் உச்சத்தில் உள்ள சிலர் சுயநலத்துடன் செயல்படுகிறார்கள். எனினும் மண்ணுக்காக, மக்களுக்காக சில நடிகர்கள் போராடி வருகின்றனர் ” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in