அதனால் தான் பாராட்டப்படுகிறேன்! - ரெஜினா கசாண்ட்ரா

ரெஜினா கசாண்ட்ரா
ரெஜினா கசாண்ட்ரா

வெப் தொடர்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார், நடிகை ரெஜினா கசாண்ட்ரா. அவர் நடித்துள்ள ’ஷூர்வீர்’ வெப் தொடர் ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. நாட்டின் பாதுகாப்புக்காக இந்திய விமானப்படை, கடற்படை, ராணுவம் மேற்கொள்ளும் துணிச்சலான நடவடிக்கைகள் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரியாக நடித்துள்ள ரெஜினா, அதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டேன் என்கிறார்.

“இந்தக் கேரக்டர் இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன். சாப்பாடு விஷயத்திலும் நிறையவே கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. இந்த கேரக்டருக்கு அந்த அர்ப்பணிப்பு தேவை என்பதால் அதை செய்தேன். அதனால் தான் அது பாராட்டப்படுகிறது’’ என்கிறார் ரெஜினா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in