டோலிவுட்டில் ஜொலிக்கும் மிருணாள் தாக்கூர்!

மிருணாள் தாக்கூர்
மிருணாள் தாக்கூர்

’சீதா ராமம்’ படத்துக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின் ஆகிவிட்டார், இந்தி நடிகை மிருணாள் தாக்கூர். அந்தப் படத்தை தயாரித்த நிறுவனமே, தங்களின் அடுத்த படத்துக்கும் அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. அது தவிர, சில முன்னணி இயக்குநர்களும் அவரிடம் கதை சொல்ல முயற்சித்து வருகிறார்களாம். ‘’உடனடியாக சம்பளத்தை பல மடங்கு ஏற்றாமல் இருந்தால் மிருணாளுக்கு தெலுங்கு சினிமாவில் சிறப்பான வாய்ப்புகள் இருக்கிறது. அவர் பாலிவுட்டை விட டோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வருவார்’’ என்கிறார் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in