பிட்லீ

தவிப்புடன் காத்திருக்கும் தமன்னா!
தமன்னா
தமன்னா

மதுர் பண்டார்கரின் 'பப்ளி பவுன்சர்' படத்தில் பெண் பவுன்சராக நடித்திருக்கும் தமன்னா, இந்தப் படத்தைப் பெரிதும் நம்பி இருக்கிறாராம். இந்தியாவின் முதல் பெண் பவுன்சர் என அழைக்கப்படும் டெல்லியை சேர்ந்த மெஹ்ருன்னிசாவின் கதையா இது என தெரியவில்லை. ஆனால், டெல்லி தெற்கில் உள்ள ’பவுன்சர் ஃபேக்டரி’ எனப்படும், அசோலா- ஃபதேபூர் பெரியில் நடக்கும் கதையாம். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றால் அடுத்த இன்னிங்ஸ் அமோகமாக இருக்கும் என நினைக்கிறாராம் தமன்னா.

அடுத்த இன்னிங்ஸ் அமோகமாகவே இருக்கட்டும்!

‘கோலமாவு கோகிலா’ படத்தின் இந்தி ரீமேக்கில், நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜான்வி கபூர். ‘குட்லக் ஜெர்ரி’ என்ற இந்தப் படத்தின் புரமோஷனில் பரபரப்பாக இருக்கும் ஜான்வி, ”எனக்குக் கிடைத்திருக்கும் இந்தப் புகழுக்கு அம்மா ஸ்ரீதேவி, அப்பா போனி கபூர் இருவரின் செல்வாக்கு தான் காரணம். இதை சொல்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்கிறார். ஏர்போர்ட், ஜிம் என எங்கு சென்றாலும் ஜான்வியை வளைத்து வளைத்து போட்டோ எடுப்பவர்கள், சில ஏடாகூட கோணத்திலும் படமெடுத்து பதிவிட்டு விடுகிறார்களாம். இப்போது தனக்கிருக்கும் பெரும் கவலையே அதுதான் என புலம்புகிறாராம் ஜான்வி.

விடு பாப்பா... இதெல்லாம் உங்கம்மா காலத்துலயே ஜகஜம்!

‘கார்கி’ படத்தில் சாய் பல்லவியின் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுகளாம். என்றாலும் வசூல் ரீதியாக படம் பெரிதாக சாதிக்கவில்லையாம். தமிழை விட தெலுங்கில் வசூல் இன்னும் சுமார் என்கிறார்கள். ஏற்கெனவே சாய் பல்லவி தெலுங்கில் நடித்த ’விராட பர்வம்’ படத்துக்கும் இதே நிலைதான். ஆனாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டர்களில் நடிப்பதை தொடர்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் அவர். வரலாற்றுப் பின்னணி கொண்ட கதைகளில் நடிக்க வேண்டும் என்பது சாயின் இன்னொரு ஆசையாம்!

அப்டின்னா... வயசாகிட்டு வருதுன்னு சொல்லுங்க!

விஜய்யின் வில்லு படத்தில் வரும் ’டாடி மம்மி வீட்டில் இல்ல’ உள்ளிட்ட சில பாடல்களை பாடியவர் நடிகை மம்தா மோகன்தாஸ். பஹ்ரைனில் பிறந்து வளர்ந்த மம்தா, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட மம்தாவிடம், அரபு பாடல் ஒன்றை பாடும்படி சிலர் கேட்க, ஒரு பாடலை மீடியா முன்பு பாடினார். இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. அரபி மொழியிலும் அவரது உச்சரிப்பும் அந்த ஸ்டைலும் அப்படியே இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

டாடி மம்மி வீட்டில் இல்லைன்னு அரபியில பாட தில் இருக்கா?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நவீன் பொலிஷெட்டி இயக்கும் தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா ஷெட்டி. வயதான பெண்ணை வாலிபர் ஒருவர் காதலிக்கும் கதையாம். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில், அனுஷ்கா, தெலுங்கு சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் ஆகிவிட்டதை இந்தப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறது. ஆம், நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக அவர் அறிமுகமான ’சூப்பர்’ வெளியாகி 17 வருடம் ஆகிவிட்டதாம்.

இந்த கேரக்டருக்குன்னே உங்கள எடுத்தாங்களோ..?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in