ராசி இல்லையோ ராஷ்மிகாவுக்கு..?

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா இப்போது இந்தியில் பிசி என்பது தெரிந்ததுதான். அவர் அமிதாப்பச்சனுடன் நடித்துள்ள 'குட்பை' விரைவில் வெளியாக இருக்கிறது. சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடித்து 'மிஷன் மஜ்னு' ரிலீஸுக்கு எப்போதோ ரெடியாகிவிட்டது. இப்போது ரன்வீர் கபூருடன் 'அனிமல்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே ஆக்‌ஷன் ஹீரோவான டைகர் ஷெராஃப்புடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் ராஷ்மிகா. இருவரும் விளம்பரப் படம் ஒன்றிலும் நடித்துள்ளனர். இவர்கள் நடிக்கும் படத்தை கரண் ஜோஹர் தயாரிக்க இருந்தார். சஷாங் கைதான் இயக்க இருந்த இந்தப் படம் பற்றிய அறிவிப்பை கரண் வெளியிடுவார் என்று எதிர்பார்த்த ராஷ்மிகாவுக்கு திடீர் ஏமாற்றம். தொடர்ந்து இந்திப் படங்கள் தோல்வி அடைந்து வருவதாலும் இந்தப் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதாலும் படத்தை நிறுத்துவிட்டாராம் கரண் ஜோஹர். இதில் ராஷ்மிகா ரொம்பவே அப்செட்டாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in