பிட்லீ

சத்தம்காட்டாத சமத்துப் பொண்ணு சமந்தா!
சமந்தா
சமந்தா

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அண்மை நாட்களாக அந்தப் பக்கம் வருவதில்லை. ’தி ஃபேமிலி மேன்’ வெப் தொடரை இயக்கிய டீஜே-வின் அடுத்த தொடரில் வருண் தாவனுடன் நெகட்டீவ் ரோலில் நடிக்கும் சமந்தா, அதற்காக சத்தம் போடாமல் இந்தி கற்கிறாராம். அத்துடன், ஹைதராபாதில் நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை வாங்கியிருக்கும் சமந்தா அதை மொத்தமாக மாற்றுகிறாராம். இவ்விரண்டு காரணங்களால் தான் அவர் சோஷியல் மீடியா பக்கம் கவனம் செலுத்தமுடியாமல் இருக்கிறாராம்.

அடடா... உங்களுக்கு அட்மின் வெச்சிக்கிற வழக்கமெல்லாம் இல்லியா சமந்து..?

நடிகை டாப்ஸி சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு தாமதமாக வந்தார். நீண்ட நேரம் காத்திருந்த புகைப்படக் கலைஞர்கள், அவரை போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்படி கூற, கண்டுகொள்ளாமல் மேடை ஏறமுயன்றார். இதனால் எரிச்சலான சில புகைப்படக் கலைஞர்கள், “நிற்க முடியாதா?” என்று அதிகாரமாகக் கேட்க, கடுப்பான டாப்ஸி, அவர்களை பதிலுக்குத் திட்டிவிட்டாராம். பிறகு, “நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னை வரச் சொன்ன நேரத்துக்குத்தான் நான் வந்தேன். இது தெரியாமல் நான் ஏதோ குற்றம் செய்துவிட்டதைப் போல நிறுத்திவைத்துக் கேள்வி கேட்பது சரியா?” என்று கேட்டாராம் டாப்ஸி.

விடுங்கம்மா... இன்னும் எத்தனை நாளைக்கு கேட்கப் போறாங்க!

தெலுங்கில் கீர்த்தி ஷெட்டி நடித்த ‘உப்பென்னா’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ‘பங்கர்ராஜூ’ படங்கள் எதிர்பார்த்த ஹிட்டடித்தது. ஆனால், ’தி வாரியர்’ வழக்கமான பார்முலா என்பதால் சக்சஸ் ஆகவில்லை. அடுத்து நிதினுடன் கீர்த்தி நடித்த ’மச்சர்லா நியோஜகவர்கம்’ படமும் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. இப்படி தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் கீர்த்தி ஷெட்டி, தமிழில் சூர்யாவுடன் நடிக்கும் ’வணங்கான்’ படத்தை பெரிதும் நம்பி இருக்கிறாராம்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம்..!?

’லைகர்’ பட புரமோஷனுக்காக ஒவ்வொரு நகரமாகப் பறந்துகொண்டிருக்கும் அனன்யா பாண்டே சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்வது உங்களைப் பாதிக்கிறதா என்று கேட்டால், “சமூகவலை தளங்களில் என்னைப் பற்றி எதிர்மறையாக ட்ரோல் செய்யும் போது உடைந்து போயிருக் கிறேன். ஆனால் இப்போது, அதையெல்லாம் கடந்து வந்து விட்டேன். இப்போது என்னால் அதை சமாளிக்க முடியும் என நினைக்கிறேன்” என்கிறார்.

அதுவே பழகிப்போயிரும்னு சொல்றது இதுதானோ!

இந்தியில், தான் நடித்த ’சர்தார் கா கிராண்ட் சன்’, ’அட்டாக்’, ’ரன்வே 34’ படங்கள் தொடர்ந்து ஓடாததால் அப்செட்டில் இருக்கிறார் ரகுல் பிரீத் சிங். அதனால் ’ராட்சசன்’ தமிழ் படத்தின் ரீமேக்கை பெரிதும் நம்புகிறாராம். ‘மிஸ் சின்ட்ரெல்லா’ என்று இதற்கு வைக்கப்பட்டிருந்த டைட்டிலை இப்போது, ‘கட்புட்லி’ (Cuttputlli) என்று மாற்றியுள்ளனர். அக்‌ஷய்குமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், தமிழில் அமலா பால் நடித்த கேரக்டரில் நடித்திருக்கிறார் ரகுல்.

ஏன்... சின்ட்ரெல்லான்னு சொன்னா மிகையா தெரியும்களா..?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in