பிட்லீ

இப்போதைக்கு திருமணம் இல்லை!
சாய் பல்லவி
சாய் பல்லவி

’விராட பர்வம்’ படத்தில் சாய் பல்லவியின் நடிப்பை பாராட்டித் தள்ளுகிறார்கள் தெலுங்கு ரசிகர்கள். அந்தத் திளைப்பில் இருக்கும் சாய் பல்லவி, “நல்ல திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். வெப் சீரிசில் அப்படி சவாலான கேரக்டர் அமைஞ்சா கண்டிப்பா நடிப்பேன். என்னைப் பற்றி திருமண வதந்திகள் வந்துட்டு இருக்கு. இப்போதைக்கு அந்த எண்ணமில்லை. வாழ்க்கையின் அடுத்த கட்டத்துல இருக்கேன். என்னைப் பற்றி இன்னும் அறிய விரும்புகிறேன்’’ என்கிறார்.

சும்மா இருங்கோபா... இப்பத்தான ஒரு கல்யாணம் முடிஞ்சிருக்கு!

ஃபரியா அப்துல்லா
ஃபரியா அப்துல்லா

விஜய் ஆண்டனி நடிக்கும் ’வள்ளி மயில்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார், ஃபரியா அப்துல்லா. தெலுங்கில் ’ஜதிரத்னாலு’ படம் மூலம் கவனிக்கப்பட்ட ஃபரியாவுக்கு கவிதை, பெயின்டிங், நடனம் ஆகியவற்றிலும் அதிக ஆர்வம். கதக், பெல்லி டான்ஸ் கற்றிருக்கிறாராம். “நடிப்புக்கு மொழி ஒரு பிரச்சினையில்லை. எந்த மொழியிலும் நடிக்க ரெடியா இருக்கேன். குறிப்பா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகள்ல நடிக்க ஆர்வம். எனக்கான எல்லைகளை சுருக்கி வைத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை” என்கிறார் ஃபரியா.

பொழைக்கத் தெரிஞ்ச பொண்ணு...

கங்கனா
கங்கனா

கங்கனா நடித்த ’தாக்கத்’ படம் கடும் சரிவைச் சந்தித்திருக்கிறது. ரூ.86 கோடியில் உருவான இந்தப் படம் ரூ.10 கோடிக்கு கூட வசூலாகவில்லையாம். நொந்து போன தயாரிப்பாளர், டிஜிட்டல், சேட்டிலைட் கடையை விரித்தாராம். அங்கேயும் 5 கோடிக்கு மேல் போகவில்லையாம். அண்மைக் காலத்தில் எந்தவொரு படமும் இப்படியொரு நஷ்டத்தை தந்ததில்லை என்கிறார்கள்.

கொஞ்ச நஞ்ச பேச்சாமா பேசுனீங்க..?

ஹனிரோஸ்
ஹனிரோஸ்

‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஹனிரோஸ், சுந்தர்.சி-யின் ’பட்டாம்பூச்சி’ மூலம் ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார் தமிழில். “நல்ல வாய்ப்புகள் அமையாததால் தமிழில் தொடர்ந்து நடிக்க முடியல. ஆனாலும் மலையாளத்துல நல்ல படங்கள் கிடைச்சது. தமிழில் நடிக்கலைன்னாலும், தமிழ் சினிமாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரஜினி சார், விஜய் சார் படங்களை அடிக்கடி பார்ப்பேன். தமிழ் எனக்கு நல்லா பேச வரும். நான் விஜய் சாரின் ரசிகையாக்கும்’’ என்கிறார் ஹனி.

மணியா பேசியிருக்கியே ஹனி!

ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்

அடுத்தடுத்து 7 படங்கள் ரிலீஸுக்கு காத்திருப்பதால் ஆனந்தத் துள்ளலில் இருக்கும் ரகுல் பிரீத் சிங், “நான் நடிச்ச படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக, கரோனாதான் காரணம். திடீர்னு ஒரு நாள் எல்லோரையும் வீட்டுல உட்கார வச்சிருச்சு, இந்த தொற்று. அதனால எதுவும் நம்ம கையில இல்லை. நான் என் வேலையை நூறு சதவீத உண்மையோடு கொடுக்கிறேன். நம்மால முடிஞ்சது அதுதான். படத்தோட ரிலீஸ், ரிசல்ட் பற்றி கவலைப்படறதில்லை” என்கிறார்.

ஆமாமா... பணம் போட்டவங்கதானே கவலைப்படணும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in